மனிதநேய மக்கள் அமைப்பு – Sri Lanka (HPF SRI LANKA) என்பது இலங்கையில் வறுமை மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறிய குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் ஒரு மனிதநேய சமூக சேவை அமைப்பாகும்.
மதம், இனம், மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயம், சமத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் எமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக வவுனியா மாவட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரம், குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
எங்களைப் பற்றி | About Us
மனிதநேய மக்கள் அமைப்பு
HUMANIST PEOPLE’S FOUNDATION – SRI LANKA
மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதநேய அடிப்படையில் மக்களுக்குச் சேவை செய்வதே எமது நோக்கமாகும்.
கல்வி, சிறுவர் அபிவிருத்தி, உணவு, சுகாதாரம், குடிநீர் மற்றும் வாழ்வாதார உதவிகள் மூலம் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்கி வருகின்றோம்.
Our Mission
We are committed to serving humanity without discrimination based on religion, ethnicity or language. Our mission is to create hope through education, child development, food assistance, healthcare, clean drinking water and livelihood support.
Registration No: G A 00366530
Location: Vavuniya, Sri Lanka